பக்கத்திலேயே தமன்னா..!மீட் பண்ணாத 'சகுனி' .
'பையா', 'சிறுத்தை' என்ற இருபடங்களில் ஜோடி போட்டு நடித்ததால், கார்த்தியும் தமன்னாவும் காதலிக்கிறார்கள் என கோலிவுட்டில் கிசுகிசுத்தார்கள்.
இந்த ஜோடி ராசியானது மட்டுமல்ல, வசூலைக் குவிக்கும் ஜோடி என்று தயாரிப்பாளர்கள் அவர்களை முற்ற� �கையிட்டாலும், தமன்னா தெலுங்கில் பிஸியாகிவிட்டார்.
கார்த்திக் திருமணம் முடிந்து தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
"கார்த்தி திருமணத்தில் கூட தமன்னா கலந்து கொள்ளவில்லை. தமன்னாவும் 'சிறுத்தை' படத்தினைத் தொடர்ந்து தனுஷுடன் 'வேங்கை' படத்தில் நடித்தார், அவ்வளவு தான் தமிழ் சினிமா ரசிகர்களை கைகழுவி விட்டு தெலுங்கு சினிமா ரசிகர்களை க ுஷிப்படுத்த சென்று விட்டார். " என்றார்கள்.
சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் 'சகுனி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. அப்படப்பிடிப்பிற்கு பக்கத்திலேயே தமன்னா நடித்த தெலுங்கு படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று இருக்கிறது.
ஆனால் இருவருமே சந்தித்து கொள்ளவே இல்லை. இருவருமே தங்களது படப்பணிகளில் கவனமாக இருந்தார்களாம். அது!
0 comments:
Post a Comment