சாமியார் மடங்களைத் தேடி ஓடும் பிரபல நடிகைகள்!
போலிச்சாமியார்கள், பிரம்மச்சரியம் பேசியபடி நடிகைகளுடன் கட்டிலைப் பகிர்ந்து கொள்ளும் ஆன்மீகவாதிகள் பற்றியெல்லாம் தொடர்ந்து செய்தி வந்தாலும், ஏனோ நடிகைகளும் ஆன்மீகமும் அதிக நெருக்கம் காட்டி வருகின்றன(ர்)!
சரி அது அவ ர்கள் பாடு...
பிரபல நடிகைகள் ஸ்ரேயாவும் தனுஸ்ரீ தத்தாவும் இப்போது ஆன்மீகத்தில் ஏகத்துக்கும் மூழ்கிவிட்டார்கள்.
இருவரும் தற்போது அதிகமாக காணப்படும் இடம் கோவையில் உள்ள ஒரு தியான மையம்.
ஸ்ரேயா ரொம்ப நாட்களாகவே இந்த தியான மையத்துக்கு வந்து தங்குகிறார். மன அமைதிக்காக இங்கே வருவதாகவும் திரையுலகை தாண்டிய புது உலகை இந்த இடம் அவருக்கு காட்ட� �வதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இப்போது, புதிதாக சந்நியாசத்துக்கு மாறியுள்ள தீராத விளையாட்டுப் பிள்ளை பட நாயகி தனுஸ்ரீ தத்தாவும் இந்த தியான மையத்துக்கு வர ஆரம்பித்துள்ளாராம்.
தலையை மொட்டை அடித்துக் கொண்டுள்ள தனுஸ்ரீ, சினிமாவில் எவ்வளவோ துரோகங்கள், கொடூரங்களைப் பார்த்து வெறுத்துப்போன தனக்கு இந்த யோக மையத்தில் நிம்மதி கிடைத்ததாகக் கூறியுள்ளார்.
� �ூமிகா ஏற்கெனவே பாதி சாமியாராகிவிட்டார்,
இவர்கள் பட்டியலில் விரைவிலேயே நயன்தாரா, லட்சுமி ராய் ஆகியோரும் சேரக்கூடும் என்கிறார்கள்.
ரஞ்சிதா, ராகசுதா லிஸ்ட்ல சேராம இருந்தா சரி...!
.
0 comments:
Post a Comment