ஹாலிவுட் படத்துக்காக 7 வயது குழந்தையை தேடுகிறார் கமல் .
ஹாலிவுட் படத்துக்கு 7 வயது குழந்தையை தேடுகிறார் கமல்ஹாசன். பேரி ஆஸ்போர்ன் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இல் அவருடன் 7 வயது அமெரிக்க சிறுமி நடிக்கிறார்.
இதற்காக நடிப்பு திறமைகொண்ட சிறுமியை தேடும் பணி தொடங்க� �� இருக்கிறது.
இது பற்றி கமல் கூறும்போது,
இந்த வேடத்துக்கு அழகான சிறுமியாக மட்டுமில்லாமல் நடிக்கும் திறமை கொண்டவர் தேவை. 7 வயது என்பது நான் சினிமாவுக்கு அறிமுகமான வயது. அந்த வயதில் ஒரு குழந்தை நடிக்க வருகிறதென்றால் அதன் மனநிலை எப்படி இருக்கும், கேமராவை எதிர்கொள்ளும்போது எந்தவிதமான எண்ணம் இருக்கும் என்பது எனக்கு தெரியும்.
அதனால்தான் என்னுடன் ந� ��ிக்கும் குழந்தைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்றார்.
விஸ்வரூபம் படம் பார்த்த அமெரிக்கர்களுக்கு அப்படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பிடித்துவிட்டது. இதனால் கமலுக்கு அமெரிக்க படம் இயக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளதாம். ஹாலிவுட் படத்தில் 7 வயது குழந்தையையும் கமலையும் சுற்றியே கதை நகர்கிறதாம். ஆக்ஷன் அம்சங்கள் நிறைந்த இந்த படத்தில் ஹீரோயின் தேர� �வு நடந்து வருகிறது.
இந்த படத்தை முடித்தபின் அடுத்த ஆண்டில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் தமிழ் படத்தை இயக்கி, நடிக்கிறார் கமல். இப்படத்துக்கு தமிழில் தலைவன் இருக்கிறான் என்றும் இந்தியில் ஆஸாத் ஹெய்ன் என்றும் தலைப்பிட்டுள்ளார்.
.
0 comments:
Post a Comment