6:09 AM
0





'மயக்கம் என்ன' படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் 'இரண்டாம் உலகம்' படத்தினை ஜார்ஜியா நாட்டில் படம்பிடித்து வருகிறார்.

ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

செல்வராகவன் இயக்கத்தில� � வெளிவர இருக்கும் இந்த பெரிய பட்ஜெட் படத்திற்காக ஆர்யா,
அனுஷ்கா இருவருமே martial arts கற்று வருகிறார்கள். இருவருக்கும் என தனித்தனியாக martial arts கற்பிக்க ஸ்பெஷலிஸ்ட்களை நியமித்து இருக்கிறாராம் செல்வராகவன்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒரு காட்சிக்காக அங்குள்ள ஆற்றில் ஆர்யா மற்றும் அனுஷ்கா இருவரும் சம்பந்த� ��்பட்ட காட்சிகளை படமாக்கினார்களாம்.

ஆர்யா - அனுஷ்கா இருவருமே ஒன்றிணைந்து " அது எப்படி நாம ரெண்டு பேர் மட்டும் தண்ணில இருக்கலாம்? " என்று ஒட்டு மொத்த படக்குழுவையும் தண்ணீருக்குள் இழுத்து விட்டார்களாம்.

பிறகு அனைவருமே சந்தோஷமாக பொழுதை போக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீடு எப்போது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இசை வெளியீடு முடிந்து, அதற்குப் � �ிறகு 1 மாதம் கழித்து தான் படம் வெளியாகும் என்கிறது கோலிவுட்.





0 comments:

Post a Comment

POPULAR POSTS