ஸ்டேஷன் போராட்டம்..!ஆந்திராவில் வளரும் வாலு!
சிம்புவின் 'வாலு' ஹைதராபாத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. தெலுங்கு பட நாயகன் மனோஜின் ஊர் என்பதால், இரவு நேரங்களில் பார்ட்டி கொண்டாட்டம் தானாம்.
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உட்பட பலர் நடித்து வரும் 'வாலு' படத்தினை விஜய் சந்தர் இயக்கி வ� ��ுகிறார். நிக் ஆர்ட்ஸ் தயாரித்து வருகிறது.
தமிழகத்தில் மட்டுமே படப்பிடிப்பு, பாடல்கள் வெளிநாட்டில் என்று திட்டமிட்டது படக்குழு. ஆனால் நடந்ததே வேறு.
ரெயில்வே காலனி, ரெயில்வே ஸ்டேஷன் ஆகியவற்றில் 60% காட்சிகள் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆகையால் தென்னிந்திய ரயில்வே நிர்வாகத்தினரிடம் ஒரு ரெயில்வே ஸ்டேஷனை வாடகைக்கு கேட்டு இருக்கிறர்கள். அதற்� �ு ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.
படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று விளம்பரம் செய்துவிட்டோமே என்று ஆலோசித்தவர்கள் நேரடியாக South Central Railway நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் உடனே ஹைதராபாத் பக்கத்தில் உள்ள ஸ்டேஷன் ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள்.
ஹைதராபாத் தனது நண்பன் மனோஜ் ஊர் என்பதால் சிம்பு உடனே ஒ.கே சொல்ல, 'வாலு'வை வளர்க்க அங்கு சென்று விட்டார்கள். படத்தின் கதைப்படி சிம்புவின் அப்பா ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். அதனால் தான் இந்த ரெயில்வே ஸ்டேஷன் போராட்டமாம்.
படப்பிடிப்புக்காக செலுத்தப்படும் டெபாசிட் தொகையும் அதிகம், வாடகையும் அதிகம் என்பதால், பரபரப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறாரகள்.
0 comments:
Post a Comment