2:24 AM
0





பாலாவுக்கும் அமீருக்கும்தான் எல்லா நேரத்திலும் போட்டி. ஒரு ஆக்ஷன் மின்னலான விஷாலை, திருநங்கை போல அவன் இவன் படத்தில் ஆடவிட்டு அதிர வைத்தவர் பாலா என்றால், ஜெயம் ரவியையும் ஒரு திருநங்கையாக காண்பிக்கப் போகிறார் அமீர். இந்த கெட்டப் ஆதிபகவன் படத்து� �்காகவாம்.

தற்போது ராஜஸ்தானில் காட்டுத்தனமான பைட் ஒன்றை ஷுட் பண்ணிக் கொண்டிருக்கிறார் அமீர். ஒரு திருநங்கை ஆவேசப்பட்டால் எதிரிகளின் கதி என்னவாக இருக்கும் என்பதை அவ்வபோது தினத்தந்தி செய்தியாக படித்திருப்போம்.
இந்தப்படத்தை பொறுத்தவரை அதையெல்லாம் து£க்கி சாப்பிடுகிற மாதிரி ஒரு ஃபைட்டை அமைத்திருக்கிறாராம் ஸ்டன்ட் மாஸ்டர் ராஜசேகர். பருத்திவீரன், ரே� ��ிகுண்டா போன்ற ஃபைட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களுக்கும் இவர்தான் மாஸ்டர்.

ஜெயம் ரவியின் இந்த திருநங்கை கெட்டப் வழக்கமான ஒன்று அல்ல என்கிறார்கள். ஆண் திருநங்கையாக மாறுவதைதான் நமது முந்தைய படங்கள் சொல்லியிருக்கின்றன. பிறப்பில் பெண்ணாகவும் குணத்தால் ஆணாகவும் மாறினால் அவள் எப்படியிருப்பாள்? 99 சதவீதம் ஆண் தோற்றத்திலிருக்கும் திருநங்கை கேரக்டர்தான் ஆ திபகவனில் ஜெயம் ரவியின் கேரக்டராம்.

கேட்கும்போதே முதுகு தண்டு ஜில்லுங்குதே!
.






0 comments:

Post a Comment

POPULAR POSTS