4:26 AM
0






விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் 'தாண்டவம்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற இருக்கிறது.

விக்ரம், அனுஷ்கா, ஏமி ஜாக்சன், சந்தானம், ஜகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ள 'தாண்டவம்' படத்தினை விஜய் இயக்கி இருக்கிறார். ந� ��ரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.


'முகமூடி' படத்தினைப் போலவே 'தாண்டவம்' படத்தினையும் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது யுடிவி நிறுவனம்.

'முகமூடி' இசை வெளியீட்டு விழாவை போலவே, இணையத்தில் போட்டிகளை வைத்து ரசிகர்களை யு.டிவி நிறுவனம், அழைக்க இருக்கிறது.

இசை வெளியீட்டு விழாவில் 'தாண்டவம்' படத்தின் பாடல்களுக்கு நடனமாட ர� �ிகர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கி இருக்கிறது யு.டிவி நிறுவனம்.

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனம் ஆடியவர்களாக இருந்தால், உடனே உங்களைப் பற்றிய விவரங்களை thaandavam2012@gmail.com என்ற இமெயிலுக்கு தங்களைப் பற்றிய தகவல்களை அனுப்பி வையுங்கள்.

அதில் இருந்து தேர்வாகும் 5 முதல் 6 நபர்களுக்கு 'தாண்டவம்' இசை வெளியீட்டு விழாவில் நடனமாட வாய்ப்பு அளிக்கப்படும்.

இதில ் தேர்வாகும் நபர்கள் ஒரு பிரபல நடன இயக்குனாரால் பயிற்றுவிக்கப்பட்டு, நிகழ்ச்சியில் பிரதானமாக மற்றவர்களுடன் இணைந்து நடனமாடலாம். விக்ரம் உள்ளிட்ட பிரபலங்கள் அந்த நடனத்தை பார்த்து ரசிக்க இருக்கிறார்கள்.





0 comments:

Post a Comment

POPULAR POSTS