12:27 AM
0





நான் ஈ வந்தாலும் வந்தது. பலாப்பழத்தை மொய்த்துக் கொண்டிருக்கும் ஈக்களைகூட டவுட்டாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டான் தமிழன். ஒரு ஈ க்கே இத்தனை மவுசு என்றால் அப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிற நானிக்கு எவ்வளவு இருக்கும்?

இதற்கு முன்பே � ��ெப்பம் என்ற படத்தில் அறிமுகமாகி பெரும் சோதனைக்கு ஆளாகியிருந்த நானி, போதும்டா தமிழ். தெலுங்குல இருக்கிற மார்க்கெட்டை தக்க வச்சுகிட்டா போதும் என்ற முடிவுக்கு வந்திருந்தார்.
அதன்பின் தமிழிலிருந்து யாரும் அவரை அழைக்கவும் இல்லை. இப்போது நான் ஈ படத்தின் வெற்றி, மறுபடியும் அவர் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது நம்ம ஊர் டைரக்டர்களை.

'நிமிர்ந்து நில்' படத்தி ல் வலுவான இன்னொரு கேரக்டருக்கு நானியை புக் பண்ணியிருக்கிறார் சமுத்திரக்கனி. தமிழில் மட்டும் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்திருந்தவர்கள், இந்த முறை தெலுங்கிலும் நேரடியாக ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

எல்லாம் நானி தந்த தெம்பு.
.





0 comments:

Post a Comment

POPULAR POSTS