இளைய தளபதி... இளைய தளபதி... -ஏலம் போட்ட மிஷ்கின்
எந்த சினிமா விழாவில் கலந்து கொள்ள வந்தாலும், வந்த இடத்தில் வாந்தியெடுத்துஅழைப்பவரையும் அவமானப்படுத்திவிட்டு போவது பிரபலங்கள் சிலரது வழக்கம். தங்கர்பச்சானை விழாக்களுக்கு அழைக்கும் போதே, 'சார்... சப்ஜெக்ட்டை விட்டுட்டு வேற விஷயத்தை � �ேசிடாதீங்க' என்றே அழைப்பார்கள். அப்படியும் வந்த வேலையை திறம்பட செய்யாமல் நகர்ந்தே இல்லை அவர்.
கடந்த வாரம் நடந்த 'முகமூடி' ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அப்படியொரு பிரச்சனை. ஆனால் அது பிரபலங்களால் ஏற்பட்டது அல்ல. ரசிகர்களால்! ஆடியோவை வெளியிட வந்திருந்தது இளைய தளபதி விஜய் ஆச்சே? கூடி கும்மாளமடித்துவிட்டார்கள் ரசிகர்கள். யார் பேச எழுந்தாலும் 'இளைய தளபதி... இள ைய தளபதி...' என்று அவர்கள் குரல் கொடுத்துக் கொண்டேயிருக்க, எல்லாருடைய பேச்சிலும் வேகத்தடங்கல்!
விஜய் பேசி முடித்துவிட்டு வெளியே கிளம்புகிற நேரத்தில் அவர் பின்னாலேயேஓடினார்கள் ரசிகர்கள். ஒரே தள்ளுமுள்ளு. விஜய்யை பார்க்கிற ஆர்வத்தில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த படத்தின் ஹீரோ ஜீவாவையும் தள்ளிவிட்டு ஓடியதுதான் அன் சகிக்கபுள் சமாச்சாரம். கீழே விழுந்தாலும் � �ீசையில மண் ஒட்டலே என்று சமாளிக்க முடியாதே? கர்புர்ரென்று கத்தித் தீர்த்துவிட்டார்.
ஜீவாவின் கோபம் இது என்றால், விஜய்யின் கோபம் வேறு மாதிரி. கூட்டத்தில் மிஷ்கின் பேச வந்தபோதும் இதே போல ரசிகர்கள் குரல் கொடுக்க, 'யப்பா... உங்களுக்கு இளைய தளபதின்னு சொல்லலணும். அவ்வளவுதானே? இதோ கேட்டுக்கங்க. இளைய தளபதி... இளைய தளபதி... இளைய தளபதி... சொல்லிட்டேன். இனிமேலாவது பேச விடுங்கப ்பா' என்றார் கோபத்தோடு.
தன்னை மேடையில் உட்கார வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் லந்தடிக்கிறாரே என்று மிஷ்கின் மீது பிற்பாடு பொசபொசவானாராம் விஜய்.
0 comments:
Post a Comment