2:44 AM
0






சென்னை: இரண்டாம் உலகம் படத்துக்கு அனுஷ்கா கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டதாக தன் மீது வந்துள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.
செல்வராகவன் இயக்கும் 'இரண்டாம் உலகம்' படம் ஆர்யா, அனுஷ்காவா ல் தாமதம் ஆவதாக கிசுகிசுக்கள் பரவின.
இருவரும் 'இரண்டாம் உலகம்' படத்துக்கு இவர்கள் ஒதுக்கிய தேதிகளை செல்வராகவன் விரயம் செய்து விட்டதாகவும் தற்போது இருவரும் வேறு படங்களில் நடிப்பதால் தங்களது கால்ஷீட்டை மாற்றி விட்டதாகவும் திட்டமிட்டப்படி படப்பிடிப்பை நடத்த முடியாமல் செல்வராகவன் தவிப்பதாகவும் கூறப்பட்டது.
குறிப்பாக, இந்தக் குழப்பத்தால் கார்த்தி நட� ��க்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் அனுஷ்காவால் நடிக்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
'இரண்டாம் உலகம்' படக்குழுவினர் செல்வராகவனுடன் தற்போது ஜார்ஜியாவில் முகாமிட்டுள்ளனர். ஆர்யா, அனுஷ்கா வருகைக்காக அவர்கள் காத்திருப்பதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், "ஆர்யா, அனுஷ்காவால் படப்பிடிப்பு தாமதமாகியுள்ளதாக வெளியான செய்திகள் அப த்தமானவை. ஆர்யாவும், அனுஷ்காவும் இப்படத்தில் நடிக்க நிறைய தேதிகளை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அவர்கள் ஒதுக்கிய கால்ஷீட்டை நாங்கள் விரயமாக்கவில்லை. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடக்கிறது. அவர்கள் எங்களுடன்தான் உள்ளனர்," என்று தெரிவித்துள்ளார்.





0 comments:

Post a Comment

POPULAR POSTS