அய்யோ கொல்ல வராங்கோ... - அலறும் மகத் .
நடிகர் மஞ்சு மனோஜின் ஆட்கள் என்னை கொல்ல முயல்கிறார்கள் என்று புகார் கூறியுள்ளார் நடிகர் மகத்.
ஒரு மது விருந்தில் நடிகை டாப்ஸிக்காக நடந்த சண்டையில் தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜும் மகத்தும் கடுமையாக அடித்துக் கொண்டனர்.
மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஹைதராபாத்துக்கு தப்பிவிட்டார்.
நடிகை டாப்ஸியே இந்த தகராறுக்கு காரணம் என கூறப்பட்டது. மகத்தும் மனோஜும் டாப்ஸியை காதலித்தனர். முதலில் மகத்துடன் சுற்றிய டாப்ஸி, பிறகு மனோஜுடன் நெருக்கமானார். மனோஜும் டாப்ஸியும் தனி வீட்டில் குடித்தனம் நடத்துவதாக ஆந்திர பத்திரிகைகளில் சமீபத்தில் கிசுகிசுக்க ள் வந்தன.
டாப்ஸி பிரிந்ததால், அவர் மீது மகத் கோபமாக இருந்ததாகவும் அவரை அடிக்கடி தொடர்பு கொண்டு டார்ச்சர் செய்ததாகவும் அந்த ஆத்திரத்தில் தான் மகத்தை மனோஜ் அடித்து உதைத்தார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இவர்கள் மோதலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று டாப்ஸி அறிக்கை விட்டுள்ளார். மனோஜை தனது அண்ணன் என்று ஒரே போடாகப் போட்டவர், மகத்தை தெரிந்ததாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் மகத்தை தாக்கிய மனோஜ் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரமானார்கள். மனோஜுடம் விசாரணை நடத்தி கைது செய்ய ஆந்திராவுக்கு தனிப்படை போலீசை அனுப்பவும் ஏற்பாடு நடந்தது. ஆனால் மனோஜ் மலேசியாவுக்கு தப்பி சென்று விட்டாராம்.
வாபஸ் வாங்கு
இதற்கிடையில் முக்கிய பிரமுகர்கள் பலர் தலையிட்டு போலீஸ் விசாரணைக்கு இடையூறு செய்வதாக கூறப்படுகிற து. விசாரணை நடத்த வேண்டாம் என்று வழக்கை கைவிடுங்கள் என்று அவர்கள் நிர்ப்பந்தம் செய்கிறார்களாம்.
மகத்திடமும் புகாரை வாபஸ் பெரும்படி சிலர் மிரட்டுகிறார்களாம். மனோஜின் ஆட்கள் தன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள் என மகத் புகார் கூறியுள்ளார்.
ஆனால் அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் செல்போனை சு� �ிட்ச் ஆஃப் செய்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மது விருந்தில் கலந்து கொண்ட நடிகர்-நடிகைகள் யார் என்ற விவரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் தயாராகி வருகிறார்கள்.
.
0 comments:
Post a Comment