11:50 PM
0

Maternal, newborn, child and adolescent health
Maternal Newborn Child Adolescent

டெல்லி: இந்தியாவில் 15 வயதிற்கு முன் உறவில் ஈடுபடுவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம் என்று கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

15 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 8 சதவிகிதம் பேர் 15 வயதுக்கு முன்னரே செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அத ே வயதுடைய ஆண்களில் 3 சதவிகிதம் பேர் மட்டுமே உடலுறவு வைத்துள்ளனர் என்பது தெரிவித்துள்ளனர்.

கரீபியன் மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளில் 15 வயதிற்கு முன்பு 17 சதவிகிதப் பெண்கள் அதிக அளவில் உறவில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலும் அதே அளவிற்கு பெண்கள் முன்னேறி வருவதாக யுனிசெப் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இதேபோல் உலகம் முழுவதும் 15 வயது முதல் 19 வயதிற்குள் தாயாகும் பெண�¯ �களின் எண்ணிக்கை 16 மில்லியன் அளவாக உள்ளதாக தெரிவிக்கிறது WHO வின் கணக்கெடுப்பு ஒன்று.

இதில் 95 சதவிகிதம் இளம் தாய்மார்கள் இருப்பது வறுமை சூழ்ந்த நாடுகளில்தான்தான். பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகளைவிட குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் இது 5 மடங்கு அதிகம் என்று தெரியவந்துள்ளது. பங்காளாதேஷ், பிரேசில், காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா மற்றும் அமெரிக்க ந�® �டுகளில் இளம் தாய்மார்கள் பாதிக்கும் மேல் இருப்பது கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் தாயான 1000 பெண்களில் 45 பேர் 15 முதல் 19 வயதுவரை உடைய பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது உடல்ரீதியான நோய்களை உருவாக்கும் குறிப்பிட்ட வயதிற்கு முன்னரே உறவில் ஈடுபட்டால் எய்ட்ஸ் நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் க�¯ �றியுள்ளனர். மேலும் அனீமியா, மலேரியா, போன்ற நோய்கள் தாக்கும் வாய்ப்பும் அதிகம் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

இளம் வயதில் கர்ப்பமடைவது எந்த அளவிற்கு உயிருக்கு ஆபத்தானதோ அதேபோல பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பில் ஈடுபடுவதும் உயிருக்கு ஆபத்தானதுதான். நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் மட்டும் ஆண்டுக்கு 2.5 மில்லியன் வளர் இளம் பெண்கள் பாதுகாப்பற்ற முறையில் கரà ��க்கலைக்கில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.


0 comments:

Post a Comment

POPULAR POSTS