சிங்கம் – 2 சக்சஸ் பார்ட்டி விடிய விடிய ஆர்யாவுடன் ஆட்டம் போட்ட அனுஷ்கா!
இந்தமுறை ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட சூர்யாவுக்கு சமீபத்தில் ரிலீஸான ‘சிங்கம்-2 படத்தின் மெகா ஹிட் அவரை ரொம்பவே சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒரு பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார் சூர்யா. சென்னையில் உள்ள ஒரு ஃபைவ்ஸ்டார் ஹோட்டலில் மிகவும் ரகசியமாக நடந்த இந்த பார்ட்டியில் பிரபல புரொடியூசர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ்ஜெயராஜ், தனுஷ், பிரபு, ஜெயம்ரவி, ஆர்யா, ஜீவா, கெளதம்மேனன், லிங்குசாமி, ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய பிரபலங்களும் கூட இந்த பார்ட்டியில் கலந்து கொண்டார்களாம்.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வாக்கில் தொடங்கிய சிங்கம் -2 பார்ட்டி, சனிக்கிழமை காலை விடியும் வரை நீண்டதாம்.
படத்தின் பப்ளிசிட்டிக்கு கூட கலந்து கொள்ள நேரம் இல்லாத அனுஷ்கா இந்த பார்ட்டியில் கலந்து கொள்வதற்காகவே ஹைதராபாத்தில் இருந்து ஸ்பெஷலாக பறந்து வந்தாராம்.
வந்தவர் வந்த வேகத்திலேயே பார்ட்டியில் தள்ளாட ஆரம்பித்து விட்டாராம். பார்ட்டி ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை அனுஷ்காவுக்கு கம்பெனி கொடுத்தவர் நடிகர் ஆர்யா தானாம். ஆர்யாவுடன் சேர்ந்து செமத்தியான பட்டையைக் கிளப்பும் ஆட்டம் போட்ட அனுஷ்கா விடியும் வரை ஆர்யாவின் கையை விடவே இல்லையாம்.
குதிரை போல இருக்கும் அனுஷ்காவின் ஆட்டத்தை பார்த்து பார்ட்டிக்கு வந்திருந்த எல்லோருமே அசந்து விட்டார்களாம். என்பது தான் சிங்கம் -2 பார்ட்டியின் ஹைலைட்.
0 comments:
Post a Comment