6:48 PM
0






மாற்றான், சிங்கம் 2 படத்திற்குப் பின்னர் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி யார் என்பதில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லிங்குசாமி இயக்கும் அந்த திரைப்படத்தில் சமந்தா அல்லது பரினீதி சோப்ரா நடிக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் த� ��வல்கள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் இயக்கும் கடல், ஷங்கர் இயக்கும் ஐ திரைப்படங்களில் இருந்து திடீரென விலகினார் நடிகை சமந்தா. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்ட தோல் அலர்ஜிதான் என்று கூறப்பட்டது. இந் நிலையில் லிங்குசாமி இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றுக்கு நாயகி செலெக்‌ஷன் லிஸ்டில் முதலாவதாக சமந்தா இருப்பதாக தகவல் வெளியாகியுல்ளது.
மாற்றான் படத்தை முடித்� �ுவிட்ட முடித்துவிட்ட சூர்யா அடுத்து சிங்கம் 2 படத்தில் பிஸியாகிவிட்டார். இந்த இரண்டு படத்திற்குப் பின்னர் இயக்குனர் லிங்குசாமி இயக்கப்போகும் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான நாயகி தேர்வு நடைபெற்றுவருகிறது. இதில் சூர்யாவுடன் சமந்தாவை நடிக்க வைக்கவேண்டும் என்று ஆவலாக உள்ளார் லிங்குசாமி.
அவருக்கு சரும அலர்ஜி நீங்கவில்லை எனில் பிரிய� �்கா சோப்ராவின் உறவினரான பரினீதி சோப்ரா நடிக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றன. வேட்டை படத்தின் தோல்விக்கு இந்த திரைப்படம் லிங்குசாமிக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.





0 comments:

Post a Comment

POPULAR POSTS