"அயன்", "கோ" பட வெற்றியையடுத்து சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் "மாற்றான்" படத்தை இயக்குகிறார் வெற்றி இயக்குனர் கே.வி ஆனந்த்.
சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகும் 'மாற்றான்' படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், பிரம� ��ண்ட பொருட் செலவில் தயாரித்துள்ளது. இரட்டைப்பிறவி வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.
நாயகியாக காஜல் அகர்வால், சச்சின் கேடேகர், தாரா, ரவி பிரகாஸ் மற்றும் இரினா மலிவா, ஜூலியா ப்லிஸ், ஜியோடினிஸ் ஆகிய ரஷ்ய கலைஞர்களும் நடித்துள்ளார்கள்.
எழுத்தாளர்கள் சுபா, இயக்குனர் கே.வி.ஆனந்த் இருவரும் 'மாற்றான்' படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளார்கள். வசனத்தை சுபா சகோதரர் கள் எழுதியுள்ளார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பா.விஜய், நா.முத்துகுமார், விவேகா, தாமரை, கார்க்கி ஆகியோர் படத்துக்காக பாடல்களை எழுதியிருக்கிறார்கள். சென்னை பிரசாத் லேப்பில் 'மாற்றான்' படத்தின் "டீசர்" திரையிடப்பட்டது.
இதையடுத்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், 'மாற்றான்' உருவான விதம் குறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறுகையில், முற்றிலும் வித்தியாசமான இர� � சூர்யாக்களை 'மாற்றான்' படம், உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறது.
அகிலன், விமலன் என்ற இரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். உடல் மொழி, பார்வை என்று அனைத்திலும் வித்தியாசப்படுத்தி இப்படத்துக்காக சூர்யா கடுமையாக உழைத்துள்ளார்.
பிரெஞ்ச் சண்டைக் கலைஞர்களை வைத்து ஓக்ஸன் காட்சிகளை அமைத்துள்ளோம். உச்சப்பட்ச கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களை இப்படத்துக்காக பய� �்படுத்தியுள்ளோம். இன்னும் ஒரு பாடலை மட்டும் எடுக்க வேண்டும்.
இரட்டைப்பிறவி ரோலில் ப்ரியா மணி நடித்திருக்கும் 'சாருலதா' படத்துக்கும் 'மாற்றான்' படத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றார்.
ஒட்டிப்பிறந்த இரட்டையர் (conjoined twins) வாழ்வில், அவர்களுக்கு நேரும் சுவாரஸ்யமான அனுபவங்கள், வித்தியாசமான உணர்வுகளையும் இவற்றின் பின்னணியில் இதுவரை கையாளப்படாத சமூகப் பிர� �்சினையை நேர்மையான கவனத்துடன் மாற்றான் படத்தில் அலசப்பட்டுள்ளது.
காதல், பாசம், வீர சாகசம், காமெடி என்று அனைத்திலும் சூர்யா அசத்தியிருக்கிறார். ஒட்டிப்பிறந்த இரட்டையரை அதிசயப்பிறவியாக இப்படத்தில் சித்தரித்துள்ளோம்.
இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் மற்றும் லாட்வியா, பால்கன் ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம் எனவும் � �வர் தெரிவித்தார்.
இதுகுறித்து நாயகன் சூர்யா கூறுகையில், இரட்டைப் பிறவி வேடத்தில் நடிப்பது தனக்கு சவாலாக இருந்தது என்றும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து செய்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment