காதலனுக்குப் (முன்னாள்?) போட்டியாக களமிறங்கும் நயன்தாரா!
நடிகை என்ற எல்லையைத் தாண்டி, அடுத்த கட்டத்துக்கும் பயணிக்க தயாராகிவிட்டார் போலிருக்கிறது நயன்தாரா.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அவர் நடித்துவரும் புதிய படத்தில், நடிகையாக மட்டுமல்ல... உதவி இயக்குநராகவும் பணியாற்� �ி வருகிறாராம்.
அதிலும் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட உதவி இயக்குனர் வேலைக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறாராம்.
படப்பிடிப்புகளில் கிளாப் போர்டு அடிப்பது, படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக வருவது, படப்பிடிப்பு முடிந்தபின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசி ஆளாக போவது என உதவி இயக்குனருக்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறா� �ாம் நயன்தாரா.
இப்படத்தில் உதவி இயக்குனர் பட்டியலில் நயன்தாரா பெயரும் இடம்பெறப் போகிறதாம். விரைவில் புதுப்படமொன்றை இயக்கும் திட்டம் உள்ளதாகவும் நயன்தாரா தரப்பில் கூறப்படுகிறது.
நயன்தாராவுக்கு இயக்குநர் ஆகும் ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது. தாடிக்குப் போட்டியாக இருக்குமோ!
0 comments:
Post a Comment