
டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' பேய் படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. இதில் லட்சுமிராய், கோவை சரளா ஆகியோரும் நடித்திருந்தனர். சரத்குமார், திருநங்கை வேடத்தில் வந்தார். இப்படத்தை ரூ.9 கோடி செலவில் எடுத்தனர். ரூ.30 கோடி, வசூல் ஈட்டியது.
'காஞ்சனா' படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. திருநங்கையாக நடிக்க சஞ்சய் தத் விருப்பம் தெரிவித்துள்ளார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இதுகுறித்து லாரன்ஸ் கூறும் போது, 'காஞ்சனா' இந்தி ரீமேக்கில் நடிக்க சஞ்சய்தத் ஆர்வமாக உள்ளார். சில பெரிய பட நிறுவனங்கள் என்னை அணுகி 'காஞ்சனா' படத்தின் இந்தி உரிமையை கேட்டு வருகின்றன. அவர்கள் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர், நடிகையர் பட்டியலையும் அளித்துள்ளனர். அவர்களிடம் விரைவில் பேச உள்ளேன் என்றார்.
0 comments:
Post a Comment